எமது இளவாலை கிராமத்தின் வீதி அகலிப்பு மற்றும் மெதுரகவீதி(காப்பற்வீதி) அமைக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது!
நீண்டநாட்களாக செப்பனிடபடாது, கிராம மக்களுக்கு பெரும் சிரமமாக காணபட்ட இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் எமது சங்கம் உட்பட கிராமத்தின் பொது அமைப்புக்கள், கிராம பற்றாளர்கள், தனிநபர்கள், வடமாகாண ஆளுநர், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலரும் தொடர்சியாக வழங்கிய அழுத்தத்தின் பயனாக இவ்வீதி செப்பனிடபடும் வேலைகள் ஆரம்பிக்கபடுகிறது!
வீதி அகலிப்பின் பணிகள் நீண்ட காலங்களின் பின் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில் எம்மால் வலி தென்மேற்கு பிரதேச சபை மற்றும் தவிசாளரின் ஆலோசனைகளோடு நடபட்ட மரக்கன்றுகள் சில பாதிப்புக்களாகின்ற போதிலும், வீதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், அதற்கேற்ப மீண்டும் மரக்கன்றுகள் நாட்டபட்டு தொடர்சியாக நீ்ண்டநாள் பராமரித்து பசுமையும், அழகும் மிகு இளவாலை வீதியை அமைப்பதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்!!!
சார்ந்தோர் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பான நன்றிகள்!!!!
தலைமை காரியாலயம்
மெய்கண்டான் வீதி, சித்திரமேழி சந்தி.
இளவாலை, யாழ்ப்பாணம்.
0750416493 | 0750416476 | 0773992478
இந்த இணையதளத்தில் பதிவிடும் எமது சங்கத்தின் சேவை தொடர்பான பதிவுகளோ , அல்லது உதவித்திட்டங்கள் தொடர்பான பதிவுகளோ எமது சங்கத்துக்கான எந்த ஒரு விளம்பரமோ , அல்லது அரசியல் நோக்கங்களோ அற்றவை. முழுவதுமாக சமூக சேவையை மட்டுமே நோக்கமாக கொண்டவை.